மே 18 சிஎஸ்கே vs ஆர்சிபி இடையேயான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதனுடைய ரசிகர்கள் உற்சாகத்தில் எல்லையை தாண்டி விட்டார்கள் என்று கூறுவதை விட எல்லை மீறி விட்டார்கள் என்றே கூறிவிடலாம். அந்த அளவிற்கு RCB ரசிகர்கள் சிஎஸ்கே ஜெர்சி அணிந்தவர்களை துன்புறுத்தி வந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

அந்த வகையில், சிஎஸ்கே ரசிகர் ஒருவர் X தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதில், போட்டியை கண்டுவிட்டு சின்னசாமி மைதானத்தில் இருந்து எனது இருசக்கர வாகனத்தில் தனியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஆர்சிபி ரசிகர்கள் 10 இருசக்கர வாகனத்தில் நான் சிஎஸ்கே ஜெர்சியை அணிந்திருப்பதை கண்டதும் என்னை விரட்ட ஆரம்பித்தனர். அவர்களை கண்டு பயந்து நான் வண்டியின் வேகத்தை அதிகரித்தேன்.

வீட்டிற்கு செல்லும் திசையையும் மாற்றி சுற்றி வீட்டிற்கு சென்று ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பித்து வந்து விட்டேன். மற்றவர்களின் நிலை என்ன ஆனதோ ? என் மனம் பதறுகிறது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதை கண்ட பெங்களூர் போலீஸ் அவருக்கு பதிலளித்துள்ளது. அதில் சம்பவம் நடந்த சரியான இடம் எது எனவும், உங்களது தனிப்பட்ட மொபைல் எண்ணை நேரடியாக எங்களுக்கு மெசேஜ் செய்யவும் வலியுறுத்தியுள்ளது. அதேபோல் இந்த வழக்கு தொடர்பான ஏதேனும் எமர்ஜென்சி தகவல் அளிக்க வேண்டும் என்றால் 112 என்ற எண்ணிற்கு கால் செய்யவும் எனவும் பதில் அளித்துள்ளது.