கடந்த ஜூலை மாதத்தில் 1.82 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த நடைபாண்டு ஜூலை மாதத்தில் 1.82 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல் 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதிலிருந்து வசூலிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச தொகை இது எனவும் கூறியுள்ளது.