வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வீதி விழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளதால் வருகின்ற ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூலை நான்காம் தேதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை மூன்றாம் தேதி கதிர்காம ஆலயத்தில் மாபெரும் ஊர்வலம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாணிக்க கங்கையில் நீர் வெட்டு விழாவில் பின்னர் ஊர்வலம் நிறைவடையும்.

இந்த ஊர்வலத்தின் போது பாதுகாப்பிற்காக வரும் காவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்குவதற்காக மூன்று பாடசாலைகளை ஒதுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தேசிய பாடசாலை, செல்ல கதிர்காம மகா வித்தியாலயம் மற்றும் தெட்டக முக வித்தியாலயம் ஆகியவை காவல்துறையினர் தங்குவதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.