தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களான பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் விலை திடீரென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் துவரம் பருப்பு ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 140 ரூபாய்க்கும் விற்பனையானது.

தற்போது இந்த விலை 20 ரூபாய் மேலும் உயர்ந்துள்ளது. பாசிப்பருப்பு கிலோ 130 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கும், உளுந்து கிலோ 130 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கும், சீரகம் கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வை இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு நியாய விலை கடைகள் மூலமாக மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும் என்றும் மல்லிகை பொருள்களையும் நியாயவிலை கடைகள் மூலமாக மானிய விலையில் வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.