தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15 மற்றும் ஜூலை 20 ஆகிய தேதிகளில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு ஜூன் 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் பணியாற்றிய காரணத்தால் அந்த நாளை ஈடு செய்ய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகின்ற ஜூன் 15 மற்றும் ஜூலை 20 ஆகிய தேதிகளில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.