
19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்ற 16 அணிகள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் மோதும்.
இந்த லீக் சுற்றின் முடிவில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தங்களின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸுடன் மோதி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று இந்தியா மலேசியாவுடன் தனது இரண்டாவது ஆட்டத்தை ஆடை இருக்கிறது. இந்த போட்டி இன்று மதியம் கோலாலம்பூரில் 12 மணி அளவில் தொடங்கும். நடப்புச் சாம்பியனான இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற தீவிரமாக முயற்சிகளை எடுத்து வருகிறது.