தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியாளர் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பு ஆண்டு நடத்தப்படக்கூடாது என்று வழக்கம் போல நீதிமன்றங்களில் எதிர்ப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் பாரம்பரியத்தை நிலைநாட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதே சமயம் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி காளைகளுடன் இருவர் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர்கள் இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தற்போது மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.