தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்தார். மறுபக்கம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பகுதிகளில் மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.