அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்கா அதிபர் ஜோபைடனை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று நேரில் சந்தித்து பேசி உள்ளார். இது குறித்து அதிபர் ஜோபேடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவின் செய்தி தெளிவாக உள்ளது. அமெரிக்கா, ஜப்பான் இடையேயான கூட்டணியில் எங்கள் முதலீடு, தேசிய பாதுகாப்பு முதல் பொருளாதார பிரச்சினைகளுக்கான பெரும் நிதி தொகையை அளிக்கிறது.
இது பல வருடங்களாக தொடரும். அமெரிக்காவுடன் ஜப்பானிய பிரதமர் உறுதியான நண்பராக இருந்து வருகிறார். அவருடன் அமர்ந்து இந்தோ – பசுபிக் போன்ற இரு நாடுகளும் அமைதி பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு நாம் எவ்வாறு இணைந்து செயல்படுகிறோம் என்பதை குறித்து விவாதிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நாங்கள் எங்கள் இராணுவ கூட்டணிகளை நவினமயமக்குகிறோம், பாதுகாப்பு செலவினங்களில் ஜப்பானின் வரலாற்று அதிகரிப்பு மற்றும் புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை உருவாக்குகிறோம் என அதில் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் கிஷிடா பிராந்திய பாதுகாப்புக்கான அமெரிக்க பணிகளுக்கு ஜோபைடனுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவும், ஜப்பானும் தற்போது சமீபத்திய வரலாற்றில் மிகவும் சவாலான மற்றும் சிக்கலான பாதுகாப்பு சூழலை எதிர்கொண்டு வருகிறது. டோக்கியோ தனது புதிய பாதுகாப்பு மூலோபாயத்தை கடந்த மாதம் வெளியிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.