கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவிலில் ஒரு பெண் போலீஸ் வசித்து வருகிறார். இவர் தஞ்சையில் உள்ள திருநீலக்குடி காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளர் விஜயகுமார் என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அவர் தினமும் செல்போன் மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.