திருப்பூர் மாவட்டத்தில் பாபி-ப்ரியா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரகல்யா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாதி அளவு இருந்த ஒரு தண்ணீர் பக்கெட்டில் தலைகுப்புற விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரியா ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தன் குழந்தையை அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.