உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் ஒரு நீச்சல் குளம் உள்ளது. இங்கு இஸ்லாம் என்ற 17 வயது சிறுவன் குளிப்பதற்காக சென்றுள்ளான். இந்த சிறுவன் நீச்சல் குளத்தில் குளித்த பிறகு வெளியே வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இருப்பினும் அவருடைய இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மேலும் நீச்சல் குளத்தில் குளித்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.