சினிமா திரையுலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 301 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 2023-ஆம் ஆண்டின் 95-வது ஆஸ்கர் விருதுகளில் 10 இந்திய திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் 2 தமிழ் படங்களும் அடக்கம். அதன்படி நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் மற்றும் நடிகர் மாதவனின் ராக்கெட்ரி போன்ற திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இயக்குனர் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், நடிகை ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்திய வாடி, இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ், காந்தாரா, செல்லோ ஷோ, மீ வசந்த் ராவ், தி நெக்ஸ்ட் மார்னிங், விக்ராந்த் ரோனா போன்ற திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் ஆஸ்கர் விருதுக்கு 10 இந்திய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.