வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகின்றது. முதல் காட்சியாக அதிகாலை 1 மணிக்கு துணிவு திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளது.
இதனை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக #ThunivuFDFS என்ற ஹாஷ்டாக்குகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். நாளை வெளியாக உள்ள துணிவு திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் எந்த அளவு உற்சாகத்தோடு ஆவலோடு எதிர்பார்க்கின்றார்கள். என்பதை #ThunivuFDFS என்ற ஹாஷ்டாக்குகளில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் திரையரங்கம் முன்பாக பெரிய பெரிய பேனர்கள், கட்டவுட்கள் வைத்து செண்ட மேளங்கள் முழங்க ரசிகர்கள் பூஜை செய்து வருகின்றார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் அஜித்தின் துணிவு பட கட்டவுட்டுக்கு கிரேனில் அலகு குத்தி தொங்கியபடி ரசிகர் ஒருவர் பால் அபிஷேகம் செய்துள்ளார். இது பொது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இருப்பினும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகின்றார்கள்.