ஏர்லைன் நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் நடப்பாண்டில் டிராவல் இந்தியா டிராவல் என்ற புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையில் குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த சலுகை ஆஃபர் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் ஜனவரி 19-ஆம் தேதி  முடிவடைகிறது. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் விமான டிக்கெட்டுகளை பயணிகள் புக்கிங் செய்து கொள்ள வேண்டும். இந்நிலையில் சிறப்பு சலுகையின்படி உள்நாட்டுப் பயணங்களுக்கு 1119 ரூபாய் முதல் டிக்கெட்டுகளை பயணிகள் புக்கிங் செய்து கொள்ளலாம்.

இதனையடுத்து சர்வதேச பயணங்களுக்கு 6599 முதல் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து கொள்ளலாம். பிப்ரவரி 4 முதல் செப்டம்பர் 30 வரை உங்களுக்கு தேவையான தேதிகளில் பயணம் மேற்கொள்வதற்கு டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம். அதற்கு மேல் சலுகை கிடையாது. விமான டிக்கெட் பயணிகள் கேன்சல் செய்வதாக இருந்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். விமானம் புறப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே கேன்சல் செய்துவிட்டால் கட்டணம் வசூலிக்க படாது. மேலும் சலுகையை விட கூடுதல் சலுகைகள் பயணிகளுக்கு வழங்கப்பட மாட்டாது.