சென்னையில் மிகப்பெரிய பன்னாட்டு விமான நிலையமாக மீனம்பாக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து டெல்லிக்கு நாள்தோறும் 19 விமானங்களும் டெல்லியில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் 19 விமானங்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 4 விமானங்கள் இயக்கப்படுகிறது. ஏர் இந்தியா விமான நிறுவனம் சார்பில் நேற்று முதல் 4 புதிய விமான சேவைகள் இயக்கப்படுகிறது.

அதன் பிறகு டெல்லி-சென்னை மற்றும் சென்னை-டெல்லி இடையே 38 விமான சேவைகள் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 4 விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால், தினந்தோறும் 42 விமான சேவைகள் இயங்குகிறது. இந்த புதிய விமான சேவைகள் சென்னையில் இருந்து தினந்தோறும் காலை 7.50 மணி மற்றும் மாலை 3:40 மணிக்கு டெல்லிக்கு செல்லும். இதேபோன்று டெல்லியில் இருந்து பிற்பகல் 2.45 மணி மற்றும் 10.35 மணிக்கு 2 விமானங்கள் சென்னைக்கு செல்லும். மேலும் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் புத்தாண்டு பரிசாக கூடுதலாக 4 விமான சேவைகள் இயக்கப்பட்டது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.