சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கோட்டூர் புரத்தைச் சேர்ந்த நடைபாதையில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்த நிலையில் அவரை தற்போது நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவர் ஏற்கனவே காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓட முயன்ற போது கால் மற்றும் கைகளில் அடிபட்டதால் மாவு கட்டு போடப்பட்டது.

அதன்பிறகு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் சிறைக்கு மாற்றப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில் போலீஸ்காவில் எடுக்கப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டனர். இதன் காரணமாக அவர் வலிப்பு வந்தது போல் நாடகமாடியது தெரியவந்துள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து உடனே அவரை சிறைக்கு மாற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.