தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த பட்சத்தில் மே மாதம் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தற்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக 42 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக வெட் பல்பு வெப்பநிலை 31.3 டிகிரி ஆக பதிவாகியுள்ளது. இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை கொண்டு கணக்கிடப்படுவதாகும். இந்த வெப்பநிலை 30 டிகிரியை தாண்டினாலே மிகவும் ஆபத்து என்கிறார் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன். இதனால் மக்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் அதிக குடிநீர் அருந்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.