சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்கம் மூலமாக ஏராளமான மாணவர்கள் பட்டப்படிப்பை பயின்று வருகிறார்கள். தற்போது 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல்கலைக்கழகத்தின் முதுகலை, இளங்கலை மற்றும் டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் இளங்கலை மற்றும் எம்பிஏ,டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு அண்மையில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் என்ற இணையதளத்தில் தங்களின் பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.