தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக தமிழகத்தில் அந்நிய முதலீடுகள் தொடர்பான விவரங்களை பட்டியலிட்டார். அப்போது கோவையைப் போல சென்னையிலும் லூலு மால் அமைய இருப்பதை அவர் உறுதி செய்தார். இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் சென்னையில் எந்த இடத்தில் இந்த திட்டம் செயல்படுத்த போகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்த பிறகு அந்த நிர்வாக இயக்குனர் பேசிய போது, சென்னையில் விரைவில் லுலுமால் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் லுலு நிறுவனம் சார்பாக உணவு பதப்படுத்தும் மையம்கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் அமைகின்றது. நெற்களஞ்சியமாக பார்க்கப்படும் விவசாயிகள் பயனளிக்கும் விதமாக தஞ்சாவூர் மார்டன் ரைஸ் மில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.