தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் அதிக அளவு வசித்து வருகிறார்கள். பெரும்பாலான மக்கள் வாகன போக்குவரத்தை மேற்கொள்வதால் அங்கு முக்கிய சாலைகளில் எப்போதுமே கூட்ட நெரிசல் இருக்கும். அதிலும் குறிப்பாக வார இறுதி மற்றும் முக்கிய தினங்களில் வாகன நெரிசல் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். என் நிலையில் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக மாநகராட்சி live traffic monitor சிஸ்டம் என்ற புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது.

இதன் மூலமாக காவல்துறையினர் நகரின் வாகன போக்குவரத்து நெரிசலை தொழில்நுட்ப ரீதியாக நேரலையில் காண முடியும். மேலும் அவசரகால தேவைகளின் போதும் முக்கியசாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக மாற்று பாதை குறித்த ஏற்பாடுகளையும் செய்து கொள்ளலாம். அதிலும் குறிப்பாக ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை நகரில் டிராபிக் நிலவரத்தை அறிவிக்கும்.

இந்த புதிய திட்டத்தின் மூலமாக டிராபிக் தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பிற்கால தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். காவல்துறையினரை போலவே பொதுமக்களும் இந்த திட்டத்தின் மூலம் அதிக டிராபிக் ஆன சாலைகள்,மாற்றுப்பாதை அறிவிப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய திட்டம் சென்னையில் முக்கிய 300 இடங்களில் ஒரு கோடி செலவில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.