மெட்ராஸ் ஐ பாதிப்பு மீண்டும் அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகிறார்கள். சென்னையில் மீண்டும் மெட்ராஸ் ஐ பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் மெட்ராஸ் ஐ பாதிப்பு 5 நாட்களில் சரியாகிவிடும் என்றாலும் பொதுமக்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.