சமீப காலமாகவே சென்னையில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மாடு முட்டி பல விபத்து சம்பவங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னை திருவொற்றியூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எருமை மாடு ஒன்று சாலையில் நடந்து கொண்டிருந்த மதுமதி என்ற பெண்ணை முட்டி தாக்கிய இழுத்துச் சென்றது .

இதில் மதுமதியின் தொடையில் மாட்டின் கொம்பு மாட்டி படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். தற்போது அவருடைய கால் அழுகியுள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் மருத்துவ செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவருடைய கணவர் வினோத் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.