தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் திரை உலகில் பிஸியான நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா வீடு இருக்கிறது. நடிகர் ரஜினியின் முழு சொத்து மதிப்பு 410 கோடி முதல் 450 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.