பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் அனைவரிடமும் பிரபலம். இது டிஆர்பி-யில் டாப்பில் இருந்தது. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகளிடையே பிரபலமானவர் சிப்பு சூரியன். இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்கின்றார்.

இவர் ரோஜா சீரியல் இருந்து ஏற்கனவே விலகுவதாக தெரிவித்து மீண்டும் அதே சீரியலில் நடித்தார். இதுபோல இரண்டு முறை விலகுவதாக தெரிவித்து அதே சீரியலில் நடித்தார். இந்த நிலையில் தற்போது சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு மாறியுள்ளார். மேலும் தற்போது சன் டிவியை கழுவி கழுவி ஊற்றி வருகின்றார். ஒரு சீரியலில் இரண்டு அல்லது மூன்று ஆண்டு நடிக்கலாம். ஆனால் ஐந்து ஆண்டுக்கு அதே கடத்தல் அதே சவால் என்று நடிப்பது கடினம்.

தற்போது அதை நினைத்தால் கூட அரைத்த மாவை அரைப்பது போல தான் இருக்கிறது. ரோஜா தொடருக்கு பின் வெள்ளி திரையில் கவனம் செலுத்த முடிவெடுத்தேன். ஆனால் பிரவீன் கூறிய பாரதி கண்ணம்மா 2 கதை எனக்கு மிகவும் பிடித்தது. இதனால் அவர் புதுமையாக தெரிவிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என தெரிவித்திருக்கின்றார்.