பள்ளிகளில் பண்டிகைகளை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பண்டிகை விழா கொண்டாட்டம் பள்ளி வேலை நேரத்தில் நடைபெற கூடாது. ஒவ்வொரு பள்ளியிலும் கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் இலக்கிய மன்ற விழாக்கள், கல்வி வளர்ச்சி நாள் விழா உள்ளிட்டவைகளை நடத்த வேண்டும் என பல உத்தரவுகளை பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ளது.