இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருதுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சமத்துவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அறநிலையத்துறை சார்பாக இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து பிற்பகலில் சமத்துவ விருந்தும் வழங்கப்பட உள்ளது. கோவில்களில் நடைபெற உள்ள இந்த சமத்துவ விருந்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. காலை 11 மணிக்கு கோவில்களில் சிறப்பு வழிபாடும் பிறகு 12 மணி முதல் சமத்துவ விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.