கடந்த வாரம் இந்தியாவில் தீபெத்  ஆன்மீக தலைவர் தலாய்லாமாவை, இலங்கையைச் சேர்ந்த சில புத்த துறவிகள் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அவரை இலங்கைக்கு வருமாறு புத்த மத துறவிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு தலாய்லாமா ஒப்புக்கொண்ட போதிலும் அவரது பயண தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் தலாய்லாமாவின் இலங்கை பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் உள்ள சீன தூதரகத்தின் உயர் அதிகாரி ஹூ வெய் நேற்று கண்டியில் உள்ள செல்வாக்கு மிக்க புத்த மத குருமார்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர்களிடம் ஹூ வெய் கூறியதாவது,  தலாய்லாமாவை எந்த நாடும் வரவேற்பதை சீன அரசும், சீன மக்களும், தீபெத் மக்களும் கடுமையாக எதிர்கின்றது.

ஏனென்றால் அவர் கூறிக் கொள்வது போல அவர் எளிமையான துறவி அல்ல. அவர் நில பிரபுத்துவ அடிமைத்தனத்தின் தலைவர். ஆன்மீக தலைவர் என்னும் பெயரில் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்து சீனாவிற்கு எதிரான பிரிவினை செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் சீனாவிடம் இருந்து தீபெத்தை பிரிக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் இந்த பிரச்சனையின் காரணமாக சீனா – இலங்கை இருதரப்பு உறவை பாதிக்கும் விதமாக இலங்கை செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.