சீனாவில் உருமாறிய pf7 கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவுக்கு இலவசமாக தடுப்பூசிகள் தந்து உதவுவதற்கு தயார் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “சீனாவிற்கு பொது சுகாதார நிபுணத்துவம் மற்றும் இலவச தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு தயாராக உள்ளது என ஐரோப்பிய கூட்டமைப்பு சுகாதார கமிஷனர் ஸ்டெல்லா கிரியாகைட்ஸ் கூறியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.