சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகின்ற ஜூன் 28 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிறைத்துறை கட்டுப்பாட்டில் கண்காணிப்பில் உள்ளார். சிறைத்துறை சார்பாக ஆயுதப்படையினர் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

மேலும் செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனையில் இருந்து வழங்கும் உணவை மட்டுமே சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறைத்துறை அனுமதி இல்லாமல் யாரும் அவரை சந்திக்க முடியாது. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வெளிநபர்களை மட்டுமே சந்திக்க அனுமதி உண்டு. ஒரு நாளில் மூன்று பேர் மட்டுமே அவரை சந்திக்கலாம். மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிறை காவலர்கள் தங்களது கண் பார்வையில் அவரை வைத்திருப்பார்கள். செந்தில் பாலாஜி மருத்துவம் தவிர்த்தே பிற தேவையை சிறை மூலம் பெற வேண்டும். சிறை துறையின் அனுமதி பெற்ற பிறகு தான் அவரை சந்திக்க யாராக இருந்தாலும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.