நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். முன்னதாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தீப் லாமிச்சேனுக்கு உயர் நீதிமன்றம் விடுதலை வழங்கியது. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு அவருக்கு டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது.