சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் எழில் நகரில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் லட்சுமிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். லட்சுமி வேலை பார்க்கும் பள்ளியில் அவரது மகள் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி சிறுமி வீட்டு பாடம் எழுத வேண்டும் என வீட்டிலேயே இருந்தார். பிற்பகல் வீட்டு வாசலில் கைகளில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிறுமி அழுது கொண்டிருந்தார்.
அதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் லட்சுமியிடம் செல்போன் மூலம் விஷயத்தை கூறினர். உடனே லட்சுமி பதறி வீட்டிற்கு வந்தார். அப்போது தண்ணீர் கேட்பது போல ஒரு நபர் வந்ததாகவும், அவர் பிளேடால் கைகளை அறுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியதாகவும் சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து யானை கவுனிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் கானா பாடல்களை பாடிவந்துள்ளார். ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது சிறுமிக்கும் தினேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று தினேஷ் மாணவியின் அனுமதியோடு வீட்டிற்குள் நுழைந்து தனிமையில் இருந்துள்ளார். அதே நேரம் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த உண்மையை கூறாமல் மாணவி தனது அம்மாவிடம் பொய்யான தகவலை கூறியுள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தினேஷை கைது செய்தனர்.