தமிழக சிறுபான்மையின ஆணையத்தின் துணை தலைவராக டாக்டர் மஸ்தான் செயல்பட்டு வந்தார். இவர் சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மாரடைப்பு காரணமாக கடந்த 21 -ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் டாக்டர் மஸ்தான் மரணத்தில் மர்மம் இருக்கலாம் என அவரது மகன் ஹரிஷ் ஷாநவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காரில் சென்ற உறவினரான இம்ரான் பாஷா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரை தனியாக ஒரு இடத்தில் நிறுத்தி மஸ்தானுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கொலைக்கு துணையாக செயல்பட்ட இம்ரான் பாஷாவின் கூட்டாளிகள் தமீம்,பஷீர்,தௌபிக் அகமது லோகேஸ்வரன் மற்றும் இம்ரான் பாஷா போன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் சிறுபான்மை ஆணையத் துணைத் தலைவராக இருந்த மஸ்தான் கொலை செய்யப்பட்ட நிலையில் இறையன்பன் குத்தூஸை துணைத் தலைவராக தமிழ்நாடு அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.