உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியா பகுதியில் 22 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் தன்னுடைய செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் சார்ஜ் ஏறிய பிறகு போனை அதிலிருந்து எடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் பாய்ந்தது.

இந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.