மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படும் சலுகை பயண அட்டைகளின் விற்பனை வருகிற ஜனவரி 23-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களில் மாதம் தோறும் ஒன்று முதல் 22 ஆம் தேதி வரை விருப்பம் போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஜனவரி 13 முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் நலன் கருதி மாதாந்திர சலுகை, மாணவர் சலுகை, பயண அட்டை மற்றும் ரூ.1000 மதிப்பிலான பயண அட்டைகளின் விற்பனை ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 23-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.