கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் சித்தராமையா தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த நடை பயணம் பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் தொடங்கிய நிலையில் அங்குள்ள காந்தி சிலைக்கு முதல்வர் சித்தராமையா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் துணை முதல்வர் டி.கே சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக முதல் சித்தராமையா தன்னுடைய ஷூவை கழட்ட முயற்சித்தார். ஆனால் அவரால் கீழே குனிந்து ஷூ லேசை கழற்ற முடியவில்லை.

இதனால் அங்கிருந்த தொண்டர் ஒருவர் அவரின் ஷூ லேசை கழற்றினார். அப்போது  தன்னுடைய கையில் ஒரு சிறிய தேசிய கொடியை வைத்திருந்தார். அவர் கையில் வைத்திருந்த தேசியக்கொடி முதல்வரின் ஷூவைத் தொடும்படியாக இருந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்வருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஏற்கனவே முதல்வர் சித்த ராமையா மீது நிலம் முறை கேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது ‌ குறிப்பிடத்தக்கதாகும்.