சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சினிமா போஸ்டர்களை எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதாவது சபரிமலைக்கு வரும் பக்தர்களில் சிலர் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய திரைப்படங்களின் போஸ்டர்களை கொண்டு வந்து கோவிலின் பாரம்பரியத்தை குலைக்கும் செயல்களில் ஈடுபட்டனர். இதனால் கேரள உயர் நீதிமன்றம் கோவிலில் சினிமா போஸ்டர்களை எடுத்து வருவது மற்றும் இசைக்கருவிகளை இசைப்பது ஆகியவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என சபரிமலை தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டுள்ளது.