நடிகர் எஸ்வி சேகரின் நாடக பிரியா குழுவின் ஐம்பதாவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது தன்னுடைய சொந்த கட்சிக்காரர்களையே விமர்சிக்கும் தைரியம், எஸ்வி சேகருக்கு இருப்பதாக பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற அவர் ஒருவர் மட்டுமே போதும் என்றார். இந்நிலையில் தற்போது நடிகர் எஸ்வி சேகர் தன்னுடைய 2 கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்தால் திமுகவுக்கு ஆதரவாக 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பிரச்சாரம் செய்வதாக கூறியுள்ளார்.

அதாவது அந்தணர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் பிறகு சட்டமன்றத்தில் போதிய பிராமணர் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் தன்னுடைய இந்த கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மட்டும்  நிறைவேற்றிக் கொடுத்து விட்டால் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன் என்று அறிவித்துள்ளார்.