கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற விவாதம் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை படிக்கும் புத்தகங்களில் தொடங்கி அனைத்திலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது வேடிக்கையாக இருந்தாலும் தற்போது இந்த விஷயம் ஒரு கொலையில் முடிந்துள்ளது. அதாவது இந்தோனேஷியாவில் மது அருந்திவிட்டு கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்று சண்டையிட்ட நபர் சக நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி ஆர் என்பவர் தன்னுடைய நண்பர் மார்க்கஸ் உடன் மது போதையில் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வாக்குவாதம் இறுதியில் பிரச்சனையில் முடிந்தது. இதனைப் புரிந்து கொண்ட மார்க்கஸ் வீட்டிற்கு செல்ல முயன்ற போது டி ஆர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.