இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு நாள் போட்டியில் 45 சதங்கள் அடிப்பது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. அதன் பிறகு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் 73 சதங்கள் அடிப்பது என்பது சாத்தியமற்றது. இதே போன்று விராட் கோலி தொடர்ந்து விளையாடினால் இந்த வருடமே சச்சினின் (49 சதங்கள்) சாதனையை முறியடிப்பார். நான் ஐபிஎல் முதல் பதிப்பில் விளையாடிய போது விராட் கோலியை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
அதாவது இவ்வளவு சிறிய வயதில் அவர் கிரிக்கெட் விளையாடுவாரா என்று நான் ஆச்சரியப்பட்டேன். பல வருடங்களாக விராட் கோலி இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். கோலி ஒரு அற்புதமான வீரர். அற்புதமான கேப்டன். இந்திய அணியில் கேப்டனை மாற்றினால் அவர்கள் ஐசிசி போட்டிகளில் வெற்றி பெறுவார்கள் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. இது அதிர்ஷ்டத்தை பொருத்தது என்றார். மேலும் விராட் கோலியை மாற்ற வேண்டும் என்று விமர்சித்தவர்களையும் அக்மல் கடுமையாக சாடியுள்ளார்.