திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டம் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். திருவண்ணாமலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை உச்சியில் மண் சரிவு ஏற்பட்டது இதனால் இந்த ஆண்டு தீப திருவிழா எப்படி நடக்குமோ என மக்கள் சோகமாக இருந்தனர்.
இந்த நிலையில் அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 13-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.