தனது கோடீஸ்வர கணவர், அவருடன் வசிக்க வீட்டு வாடகை கேட்பதாக மனைவி ஒருவர் வினோத புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், தன்னுடைய கணவர் கோடீஸ்வரர். ஆனால் தனக்கு அவரோடு அந்த வீட்டில் வசிக்க வாடகை கேட்கிறார் என்று புலம்புகிறார்.

மேலும் கோல்ப், போட்டிங் என தன் கணவர் சொகுசாக வாழ்வதாகவும், தன்னை விட்டுவிட்டு சுற்றுலா செல்வதாகவும், ஆனால் தாம் பல மணி நேரம் வீட்டு வேலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், அவரின் கணவரை விமர்சிக்கின்றனர்