உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரின் கன்கெர்கெடா பகுதியில் தெருவில் சுற்றித்திரிந்த ஐந்து நாய்க்குட்டிகளை இரு பெண்கள் உயிருடன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தூக்கத்தை தொந்தரவு செய்ததற்காக இரவில் தூங்கி எழுந்த ஷோபா மற்றும் ஆர்த்தி ஆகிய இரு பெண்கள், பிறந்த 3 நாட்களே ஆன இளம் நாய்க்குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியதுடன், அப்பகுதியில் உள்ள மக்கள் உயிரிழந்த நாய்க்குட்டிகளின் உடல்களை அக்கறையுடன் அடக்கம் செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து அனிமல் கேர் சொசைட்டியின் பொதுச் செயலாளர் அன்சுமாலி வசிஷ்த் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கன்கெர்கெடா காவல் நிலையத்தில் ஷோபா மற்றும் ஆர்த்தி ஆகிய இரு பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.