பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகர் ரச்சிதா சொந்தமாக ஒரு ராயல் என்ஃபீல்டு பைக்கை வைத்துள்ளார். இந்த பைக்கில் ரச்சிதா அடிக்கடி ரைடு செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தன்னுடைய ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரச்சிதா கையை விட்டுவிட்டு பைக் ஓட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலா வரும் நிலையில் ரச்சிதா கையை விட்டுவிட்டு பைக் ஓட்டியது தவறான முன் உதாரணம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் என நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் இப்படி ரிஸ்க் எடுத்துவிட்டு பைக் ஓட்ட வேண்டாம் எனவும் ரசிகர்கள் ரச்சிதாவுக்கு அட்வைஸ் கூறி வருகிறார்கள்.