தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனா. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ள நிலையில் தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் வித்யாசாகர் நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்த நிலையில் அதிலிருந்து மீண்டு தற்போது படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். நடிகை மீனாவுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

தன் கணவர் இறப்புக்கு பிறகு தோழிகளுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா, சூட்டிங் என நடிகை மீனா பிஸியாக வலம் வரும் நிலையில், தற்போது நடிகர் விஜய் மற்றும் அஜித் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த நடிகை சங்கவியுடன் சேர்ந்து டம்டம் என்ற பாடலுக்கு மீனா நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை நடிகை மீனா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி லைக்ஸ்களை குவிந்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)