கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட் செஸ் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் தன்னுடைய 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இளம் வயதில் கிராண்ட் மாஸ்டரான உலகின் 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

தற்போது கேண்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இளம் வயதில் பட்டம் என்ற வீரர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் சாம்பியனுடன் போட்டியிட இருக்கிறார். மேலும் கேண்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்றதற்காக குகேனுக்கு ரூ.78.5 லட்சம் பரிசு தொகையாக கிடைத்துள்ளது.