தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கூட்டணி சேர்வதற்கு பாஜக தன்னிடம் நிறைய ஆசை வார்த்தைகளை சொன்னதாக சீமான் பகிர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தேனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான், பாஜக கூட்டணியில் இணைந்திருந்தால் 10 சீட்டுகளுடன் 500 கோடியும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைக்காததால் நான் கேட்ட சின்னமும் எனக்கு கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலகமாகவே செயல்பட்டு வருகின்றது என பேசினார். இவருடைய இந்த பேச்சு தமிழக அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.