உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் google நிறுவனமும் 12000 ஊழியர்கள் அல்லது 6 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.‌ அதன்படி தற்போது கூகுள் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 450 இந்தியர்களை google நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

இது குறித்த தகவலை கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை  சேர்ந்த ஊழியர்கள் மட்டுமின்றி சிங்கப்பூரை சேர்ந்த ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மாற்றுவாய்ப்புக்காக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.