நம்மில் பலரும் இன்றைய காலகட்டத்தில் நமக்குள் எழும் கேள்விகளுக்கு உடனே விடை தேடுவதற்கு கூகுளை தான் நாடுகிறோம். நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள், அன்றாடம் நடக்கும் செய்திகள் அனைத்தையும் வழங்கும் தகவல் களஞ்சியமாகவே கூகுள் இருக்கிறது. நமக்கு தகவல்களை அள்ளிக் கொடுக்கும் ஒரு தளமாக உள்ளது. அதனிடம் எந்த கேள்வி கேட்டாலும் உடனடியாக பதில் கொடுக்கும். இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், குற்றங்களை தடுக்கும் நோக்கத்திற்காகவும் தொழில்நுட்ப விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கூகுளில் நீங்கள் நினைப்பது எல்லாம் தேட முடியாது. எல்லா கேள்வியும் உங்களால் கேட்கவும் முடியாது. கூகுளில் சில கேள்விகளுக்கான பதிலை கண்டறிவது சிக்கலை ஏற்படுத்தலாம். அந்தவகையில் கூகுளில் இந்த விஷயங்களை எல்லாம் தேடினால் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? பிரஷர் குக்கர் வெடிகுண்டு தயாரிக்கும் முறை குழந்தைகளின் ஆபாசப் படங்கள். குழந்தை பாலியல் துஷ்பிரயோக வீடியோக்கள்,  கடத்தல் செயல்முறை, போதைப்பொருள் தகவல, கருக்கலைப்பு தொடர்பான தகவல்கள் இவற்றைப் பற்றி கூகுளில் தேடினால் போலீஸ் உங்களை தேடி வரலாம்.