இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை புதுப்பிக்க வேண்டும். இந்த கேஒய்சி சோதனைக்கு என்ற இந்திய ரிசர்வ் வங்கி தற்போது புதிய விதிகளை வெளியேற்றுள்ளது.

அதாவது இனி முகவரியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பழைய முகவரியில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் கேஒய்சி சோதனைக்காக நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஏ டி எம், இமெயில் அல்லது ஆன்லைன் இவற்றின் மூலமாக self declaration செய்தால் மட்டும் போதும். வாடிக்கையாளர்களை வங்கிகள் நேரடியாக இனி அழைக்கக்கூடாது என்ற ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் முகவரி மாற்றம் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் புதிய முகவரிக்கான ஆவணங்களை வங்கிக்கு நேரடியாக சென்ற தான் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.